June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 14,516 பேருக்கு கொரோனா

1 min read

Corona affected 14,516 over night in India

20-6-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,516 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

14,516 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு பற்றி விரவங்களை தினமும் காலையில் மததிய சுாகாதார அமைச்சகம் வெளியிட்டுவருகிறது. அதன்படி இன்று காலை வெளியிட்ட தகவல் வருமாறு-
இந்தியாவில் நேற்று(வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 14,516 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோன உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 90 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு 12,948 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 14,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 95 ஆயிரத்து 048 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில், ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 269 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 13 ஆயிரத்து 831 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

378 பேர் சாவு

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 378 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநிலம் வாரியாக…

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் (அடைப்புக்குறிக்குள்) மாநிலம் வாரியாக வருமாறு:-

மராட்டியம் – 1,24,331 ( 5,893)

தமிழ்நாடு- 54,449 ( 666)

டெல்லி -53,116(2,035)

குஜராத்-26,141(1,618)

உத்தரபிரதேசம்-15,785(488)

ராஜஸ்தான்-14,156(333)

மேற்கு வங்கம்- 13,090(529)

மத்திய பிரதேசம்,-11,582(495)

அரியானா-9,743(144)

கர்நாடகா-8,281(124)

ஆந்திரா 7,961(96)

பீகார்-7,181(50)

தெலுங்கானா-6,526(198)

காஷ்மீர்-5,680(75)

அசாம்-4,904(9)

ஒடிசா-4,677(11)

பஞ்சாப் 3,832(92)

கேரளா-2,912(21)

உத்தர்காண்ட்-2,177(26)

சத்தீஸ்கர்-2,028(10)

ஜார்க்கண்ட்-1,965(11)

திரிபுரா-1,178(1)

லடாக்744(1)

கோவா-725(0)

மணிப்பூர்-681(0)

இமாச்சல பிரதேசம்-619(8)

சண்டிகர்-381-(6)

புதுச்சேரி-286-(7)

நாகலாந்து-198(0)

மிஜோரம்-130(0)

அருணாச்சல பிரதேசம்-103(0)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.