June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 15,968 பேருக்கு கொரோனா

1 min read

15.968 people affected by corona in India one day

24-6-2020

இந்தியாவில் நேற்று ) ஒரே நாளில் 15,968 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 லட்சமாக உயர்ந்துள்ளது.

15,968 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகம் தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசால் புதிதாக 15,968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 183 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில், ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 58 ஆயிரத்து 685 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

465 பேர் சாவு

நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் கொரோனாவுக்கு 465 பேர் இறந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலம் வாரியாக…

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை மாநிலம் வாரியாக வருமாறு:-
அந்தமான் நிகோபார் தீவுகள் – 50
ஆந்திர பிரதேசம் – 10002
அருணாச்சல பிரதேசம் – 148
அசாம் – 5831
பீகார் – 8153
சண்டிகர் – 418
சத்தீஸ்கர் – 2362
தாதர் மற்றும் நாகர் ஹவேலி – 120
டெல்லி – 66602
கோவா – 909
குஜராத் – 28371
அரியானா – 11520
இமாச்சல பிரதேசம் – 775
ஜம்மு – காஷ்மீர்- 6236
ஜார்க்கண்ட் – 2185
கர்நாடகா – 9721
கேரளா – 3451
லடாக் – 932
மத்திய பிரதேசம் – 12261
மராட்டியம் – 139010
மணிப்பூர் – 921
மேகாலயா – 46
மிசோரம் – 142
நாகலாந்து – 330
ஒடிசா – 5470
புதுச்சேரி – 402
பஞ்சாப் – 4397
ராஜஸ்தான் – 15627
சிக்கிம் – 79
தமிழ்நாடு – 64603
தெலுங்கானா – 9553
திரிபுரா – 1259
உத்தரகாண்ட் – 2535
உத்தர பிரதேசம் – 18893
மேற்கு வங்காளம் – 14728

மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள்-8141

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.