June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 33 பேர் சாவு

1 min read

33 people death for corona in Tamil Nadu today

24-6-2020

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 33பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பற்றிய தகவலை மாநில சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல் வருமாறு:-

தமிழகத்தில் இன்று( புதன்கிழமை) மட்டும் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 91 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ் நாட்டில் மொத்தமுள்ள 88 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 32,079 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் மொத்தம் 9,76,431 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

33 பேர் சாவு

தமிழகத்தில் இன்று மட்டும் 33 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதில் 25 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 8 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் இறந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி 866 பேர் கெரோனாவுக்கு இறந்துள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 37,763 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 28,836 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு தமிழக சுகாதார த் துறை அறிவித்துள்ளது.

சென்னையில்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 2,865 பேரில் சென்னையில் மட்டும் 1,654 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் மொத்தம் 45,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 131 பேருக்கும், மதுரையில் 97 பேருக்கும், திருவள்ளூரில் 87 பேருக்கும், தேனியில் 81 பேருக்கும், திருச்சியில் 76 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

மாவட்ட வாரியாக…

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுயம் இறந்தவர்களின் (அடைப்புக்குறிக்குள்) எண்ணிக்கையும்

மாவட்ட வாரியாக வருமாறு-

அரியலூர் 8
செங்கல்பட்டு 131
சென்னை 1,654
கோவை 25(1)
கடலூர் 41(3)
தர்மபுரி 1
திண்டுக்கல் 13(1)
ஈரோடு 4
கள்ளக்குறிச்சி 18(1)
காஞ்சிபுரம் 66
கன்னியாகுமரி 22(1)
கரூர் 9(4)
கிருஷ்ணகிரி 3
மதுரை 97
நாகப்பட்டினம் 62(2)
நாமக்கல் 1
நீலகிரி 2
பெரம்பலூர் 5
புதுக்கோட்டை 13
ராமநாதபுரம் 1
ராணிபேட்டை 2
சேலம் 55(7)
சிவகங்கை 15
தென்காசி 81
திருப்பத்தூர் 11
திருவள்ளூர் 87
திரு வண்ணாமலை 54(2)
திருவாரூர் 31
தூத்துக்குடி 49
திருநெல்வேலி 31
திருப்பூர் 1
திருச்சி 76(1)
வேலூர் 51(1)
விழுப்புரம் 34(5)
விருதுநகர் 40(2)
வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் வந்தவர்கள் 31
உள்நாட்டு விமானம் மூலம் வந்தவர்கள் 21
ரெயில் மூலம் வந்தவர்கள் 1

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.