இந்தியாவில் ஒரே நாளில் 24,248 பேருக்கு கொரோனா; உலக அளவில் 3-வது இடம்
1 min read
All over India 24.248 person affected for corona
6-7-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 24,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்துக்கு வந்தது.
24,248 பேருக்கு கொரோனா
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த விவரத்தை ம்ததிய சுகாதார அமைச்சகம் தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை)) ஒரே நாளில், 24,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால்,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 6,97,413 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 425 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும் 19,693 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 1,80,596 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை சேர்ந்து மொத்தம் 99,69,662 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் வாரியாக…
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும்(அடைப்புக்குறிக்குள்) மாநிலம் வாரியாக வருமாறு:-
மராட்டியம் 2,06,619 ( 8,822)
தமிழ்நாடு 1,11,151 ( 1,510)
டெல்லி 99,444 ( 3,067)
குஜராத் 36,037 ( 1,943)
உத்தரபிரதேசன் 27,707 ( (785)
தெலுங்கானா 23,902 (295)
‘கர்நாடகா 23,474 (372)
மேற்குவங்காளம் 22,16 (757)
ராஜஸ்தான் 20.164 (456)
ஆந்திரா 18,697 (232)
அரியானா 17,005 (265)
மத்திய பிரதேசம் 14,930 (608)
பிகார் 11,876 (95)
அசாம் 11,388 (14)
ஒடிசா9,070 (36)
காஷ்மீர் 8,283 ( 164)
பஞ்சாப் 6,283 ( 164)
கேரளா 5,429 (25)
சதீஷ்கர் 3,207 (14)
உத்ரகாண்ட் 3,124 (42)
ஜார்க்கண்ட் 2,781 (19)
கோவா 1,761 (7)
திரிபுரா 1,568 (1)
மணிப்பூர் 1,366 (0)
இமாச்சல பிரதேசனம் 1,063 (11)
லடாக் 1,005 (12)
புதுச்சேரி 946 (12)
நாகலாந்து 590 (0)
சண்டிகர் 466 (6)
அருணாசல பிரதேசம் 269(1)
3-வது இடம்
தற்போது உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தயா மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 28 லட்சம் பேருக்குத் தொற்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டில் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் இறந்துள்ளனர். 6.9 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, இந்தியா, ரஷ்யாவை முந்தி, 3வது இடத்தை வந்துள்ளது. ரஷ்யாவில், 6,81,251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.