நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா உறுதி
1 min read
Corona confirms actress Aishwarya Rai

13-7-2020
முன்னாள் உலக அழகியும், சினிமா நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமிதாப்
இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அதில், “எனக்கு நடத்தப்பட்ட சோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால் நான் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆஸ்பத்திரி நிர்வாகம் அரசு அதிகாரிகளுக்கு இதுகுறித்து தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து எனது குடும்பத்தினருக்கும், ஊழியர்களுக்கும் நோய்த்தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்று அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவரும் இதை தனது டுவிட்டர் பதிவில் அறிவித்து இருந்தார்.
ஐஸ்வர்யா ராய்
இந்த நிலையில் அபிஷேக் பச்சனின் மனைவியும் முன்னாள் உலக அழகியுமான நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
முன்னதாக இதனை உறுதி செய்து ட்வீட் பகிர்ந்து இருந்த மராட்டிய மாநில சுகாதார துறை மந்திரி ராஜேஷ், பின்னர் அதனை நீக்கிவிட்டார்.
அவர் பகிர்ந்திருந்த ட்வீட்டில், “ஐஸ்வர்யா பச்சனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. ஜெயா பச்சனுக்கு கொரோனா இல்லை,” என குறிப்பிட்டு இருந்தார்