இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 99 டாக்டர்கள் இறந்துள்ளனர்
1 min read
99 Doctors died for corona all over India
15-7-2020
இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 99 டாக்டர்கள் இறந்துள்ளனர். மேலும் 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டாக்டர்கள்
கொரோனா பரவி வரும் இந்தக் காலத்தில் மருத்துவக்குழுவினரின் பணி மகத்தானது. இதனால் பல மருத்துவக் குழுவினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் உயிரை துச்சமாக மதித்து டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
99 பேர் சாவு
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் சுமார் 11 லட்சம் பேர் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 99 டாக்டர்கள் பலியாகி உள்ளனர். இவர்களில் 73 டாக்டர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ,19 பேர் 35 வயது முதல் 50 வயதுக்குட்பட்டோர். 7 பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள்
மேலும் மருத்துவர்களின் வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் எனவும், பிபிஇக்கள் துப்புரவு பொருட்கள் வழங்குவதில் தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்பட வேண்டும்.மேலும் ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்டவற்றில் சிறப்பு கவனம் தேவை.
இவ்வாறு அந்த அளிக்கையில் கூறப்பட்டு உள்ளது..
இந்த தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சிகவுன்சில் வெளியிட்டுள்ளது. ஆனால் மத்தியசுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் மருத்துவர்கள் சுகாதாரப்பணியாளர்களின் தொற்று பாதிப்பு குறித்த தகவல் வெளியிடப்படவில்லை .