சம்பளத்தை குறைக்க மறுக்கும் நடிகை
1 min read
15.7.2020
Actress who refuses to reduce salaryதமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிப்பதற்கு நாயகிகளே இல்லாததை போல் ஒரே நாயகியிடம் பணத்தைக் கொட்டுகிறார்கள் சில தயாரிப்பாளர்கள். இதனால் அந்த நாயகி கொஞ்சம் திமிராகத்தான் இருக்கிறாராம் சில காலமாக.
கேட்டால் தற்போதைக்கு நான்தான் நம்பர் ஒன் என பீத்திக் கொள்கிறாராம். அதுமட்டுமில்லாமல் தற்போது தான் அந்த நாயகி முதல் காதல் பண்ணுவது போல் இயக்குனருடன் சேர்ந்து கொண்டு அவர் செய்யும் அட்டகாசம் தாங்கமுடியவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
அடிச்சு ஓஞ்ச அலையில் யாரு விளையாடினால் என்ன என்பது போல் ஆகிவிட்டது அந்த நாயகியின் நிலைமை. இருந்தாலும் பெரிய மனசு பண்ணி அந்த நடிகையை காதலித்து வருகிறார் அந்த இயக்குனர்.
இந்நிலையில் சமீபகாலமாக அந்த காதலரின் அறிவுரையில் தான் படங்களில் நடித்து வருகிறாராம். அதனால்தான் குப்பை படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டுக்கு ஆப்பு வைத்துக் கொண்டார்.
அதன்பிறகு கமர்சியல் படங்களில் நடிக்க மாட்டேன் என கூறிக் கொண்டிருந்த நாயகி வேறு வழியில்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு சம்பளத்தை பெருமளவில் உயர்த்தி விட்டார்.
தற்போது நடிகர்களே தங்களுடைய சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்டு இருக்கும் வேளையில் நான் குறைக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறாராம் அந்த நாயகி.
உங்களை விட இளம் நாயகிகள் நிறைய இருக்கிறார்கள் என கேரளா பக்கம் வண்டியை திருப்பி விட்டார்களாம் நம்ம தயாரிப்பாளர்கள்.