Hotel owner commits suicide by killing wife, children
15-7-2020
ஊரடங்கு காரணமாக தொழிலை நடத்த முடியாமல் நஷ்டம் அடைந்த ஓட்டல் அதிகார் மனைவி, குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஓட்டல் அதிபர்
மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (வயது37). ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தார். இவரது மனைவி மயூரி (27). இவர்களது மகன் ஆதித்யா, மகள் ஆயுஷ்.
ஓட்டல் தொழில் நடத்தி வந்த அமோல் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி இருந்தார். அதை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஓட்டலை திறந்து நடத்தமுடியவில்லை. இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. கடனையில் திரும்ப செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டார்.
கொலை - தற்கொலை
இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அமோல் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தனது உறவினர்களுக்கு போன் செய்து கூறினார். பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உறவினர்கள் அங்கு வந்து பார்த்த போது அமோலும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது கடன் தொல்லை காரணமாக இம்முடிவை அமோல் எடுத்தது தெரியவந்தது.