இந்தியாவில் ஒரே நாளில் 32,695 பேருக்கு கொரோனா- 606 பேர் சாவு
1 min read
All over India 32.695 person affected for Corona and death 606 one day
6-7-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 32,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 606 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
32,695 பேருக்கு கொரோனா
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் நேற்று(புதன்கிழமை)) ஒரே நாளில், 32,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 9,68,879 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 606 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும் 32,695 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 6,12,815 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,31, 146 பேர் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மராட்டியம்
இந்தியாவில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் மொத்தம் 2,75,640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில்152613 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 10928 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதனை அடுத்து தமிழ்நாட்டில் 1,51,820 பேருக்கும், டெல்லியில் 1,16,993 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத அமைச்சகம் அறிவித்துள்ளது.