ஆலங்குளத்தில் விபத்தில் சிக்கிய காரில் கட்டுகட்டாக பணம்
1 min read
Currency money in accident car at Alangulam
16-7-2020
ஆலங்குளத்தில் விபத்தில் சிக்கிய காரில் கட்டுகட்டாக பணம் இருந்தது. அது ஹவாலா பணமா என்பது குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
விபத்தில் சிக்கிய கார்
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆலங்குளத்தில் நேற்று ( புதன்கிழமை) இரவு கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இதுபற்றிய கதவல் கிடைத்ததும் ஆலங்குளம் போலீசார் அங்கு வரைந்து சென்றனர்.
காரை ஓட்டி வந்தவர்கள் அங்கு இல்லை. எனவே இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்த முடியவில்லை.
கட்டுக்கட்டாக பணம்
விபத்துக்குள்ளான அந்த காரில் கட்டுகட்டாக ரூபாய் நோட்டு இருந்தன. அது ரோட்டில் விழுந்து கிடந்தன. காரில் வந்தவர்கள் அதனை எடுக்காமல் தப்பிச்சென்றது ஏனென்று தெரியவில்லை.
மொத்தம் 34 லட்சம் ரூபாய் இருந்தது- அவற்றை கைப்பற்றிய போலீசார் அந்த பணம் ஹவாலா பணமா என போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.