சிம்பிளாக நடந்த சின்னத்திரை நடிகை திருமணம்
1 min read
பிரபல சின்னத்திரை பிரபலம் தனது திருமணத்தை சிம்பிளாக தனது குடும்பத்துடன் முடித்திருக்கிறார்.
Simple iconic actress marriageகொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால், பெரிதான நிகழ்சிகளும், திருமணங்களும் தற்போது தவிர்க்கப்பட்டு வருகின்றது. இதனிடையே இந்நேரத்தில் பிரபலங்கள் சிலர் சிம்பிளாக தங்கள் திருமணங்களை முடித்து இருக்கின்றனர். தற்போது இந்த வரிசையில் தொலைக்காட்சி பிரபலமான மீரா அனில் இணைந்திருக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்தவரான இவர், கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக Comedy Stars என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் இவர் அமலா பால் – நிவின் பாலி நடித்த மிலி திரைப்படத்திலும் நடித்தார்.
இவர் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரான விஷ்ணு என்பவரை மணமுடித்திருக்கிறார். குடும்பத்துடன் சிம்பிளாக கோயிலில் நடந்த இவர்களின் திருமண புகைப்படங்களை அந்த புகைப்பட நிறுவனம் பகிர, தற்போது இந்த க்ளிக்ஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.