நடிகருக்கு பிறந்தநாள் கொண்டாட ஓடோடி வந்த காதலி- கடுப்பில் மனைவி
1 min read
17.7.2020
Girlfriend who came running to celebrate the actor’s birthday- wife under pressureஅந்த இளம் நடிகர் ஒருவர் தான் ஆசை ஆசையாய் காதலித்து கல்யாணம் பண்ணிய மனைவியை விவாகரத்து பண்ணியது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதற்கு காரணமே ஒரு விளையாட்டு வீராங்கனை ஒருவரை அவர் காதலித்து வருவது தான் என்கிறது கோலிவுட் வட்டாரம். அவருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாகத்தான் அவரது மனைவியை மிரட்டி விவாகரத்து பெற்றதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
முதலில் விவாகரத்திற்கு விருப்பம் இல்லாமல் இருந்த அவரது மனைவியை வெறுப்பேற்றும் வகையில் அடிக்கடி இரவில் சேர்ந்து சுத்தி அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி தானாகவே வலிய வந்து விவாகரத்து கொடுக்கும்படி செய்துவிட்டாராம் அந்த நடிகர்.
அந்த நடிகருக்கும் அவரது காதலி மனைவிக்கும் பிறந்த குழந்தையை சாக்காக வைத்து எப்படியாவது அந்த நடிகரை தன் பக்கம் இழுத்து விடலாம் என நினைத்துக்கொண்டிருந்த மனைவிக்கு ஆப்பு வைக்கும் வகையில் புதிய காதலி செல்லம், தங்கம் என உருகி உருகி காதலிக்கிறாராம்.
அந்த அன்பில் விழுந்த நடிகர் இனி தனது காதல் மனைவியுடன் சேர்வதற்கான வாய்ப்பு இல்லையாம். சரி இரண்டாவது திருமணம் என்றால் சத்தம் இல்லாமல் இருக்க வேண்டியதுதானே. அதை விட்டு விட்டு இருவரும் இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதும் முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்தும் அவரது காதல் மனைவி வெறுப்பேத்தி வருகிறார்.
தற்போது ஊரடங்கு நிகழ்ந்து கொண்டிருந்தாலும் இ-பாஸ் வாங்கி அக்கட தேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து காதலருடன் நடுராத்திரியில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் அவரது காதலி. இதை பார்த்த அவரது முதல் மனைவி கொல காண்டில் இருக்கிறாராம்.
அந்த நடிகருக்கு பட வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையாத நேரத்தில் தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து நடிகருக்கு உதவியதால் அதில் நெருக்கம் அதிகமாகி காதல் மலர்ந்ததாக கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.