ஏற்கனவே நோய் உள்ளவர்கள்தான் கொரோனாவுக்கு அதிகமாக இறக்கிறார்கள்; மதுரை ஆய்வில் தகவல்கள்
1 min read
People with the disease are more likely to die of corona
17-7-2020
ஏற்கனவே நோய் உள்ளவர்கள்தான் கொரோனாவுக்கு அதிகமாக இறக்கிறார்கள் என்று மதுரையில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்படி 82.8 சதவீதம் பேர் இறக்கிறார்கள்.
மதுரையில் ஆய்வு
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில்தான் அதிக அளவில் பாதிப்பு இருந்தது. இப்போது மற்ற நகரங்களிலும் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மதுரையில் பலர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.3 சதவீதம் பேர் இறக்கும் சூழ்நிலை உருவாகிறது. இந்த மாவட்டத்தில் தினமும் 5 பேரை பலியாகிறார்கள்.
கடந்த புதன் கிழமை வரை இந்த மாவட்டத்தில் 129 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.. மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த இறப்புகளுக்கான காரணங்களை சிறப்பு டாக்டர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இறப்பு எண்ணிக்கை
ஜூலை மாதம் 7-ந் தேதி வரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 95 பேர் கொரோனா தாக்கி இறந்துள்ளனர். இதில் 74 பேர் ஆண்கள். 21 பேர் பெண்கள். அதாவது, ஆண்கள் 78.9, பெண்கள் 21.1 சதவீதம் பலியாகி இருக்கின்றனர்.
இறந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 69 பேர். இது மொத்த இறப்பில் 72.63 சதவீதம் ஆகும். 60 வயதிற்கு கீழ் கொரோனாவுக்கு இறந்தவர்கள் 26 பேர்.
இறந்தவர்களில் 75.4 சதவீதம் பேர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.. 24.6 சதவீதம் பேர் திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
இறந்தவர்களில் 66.2 சதவீதம் பேர் நகர் பகுதியிலும். 33.8 சதவீதம் பேர் கிராமப்புறங்களிலும் வசித்தவர்கள்.
நோய் உள்ளவர்கள்
கொரோனாவில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே நோய் அறிகுறியுடன் காணப்பட்டவர்கள் தான் அதிகம் இறந்துள்ளனர். இப்படி 95.4 சதவீதம் பேர் மரணத்தை தழுவி உள்ளனர். 4.6 சதவீதம் பேர் எந்த அறிகுறியும் இன்றி கொரோனாவால் இறந்துள்ளனர்..
ஏற்கனவே நோயால் அவதிபட்டவர்களில் 82.8 சதவீதம் பேர் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். கொரோனா மட்டுமே இறந்தவர்கள் 17.2 சதவீதம் தான்.
இந்தவர்களில் 35.5 சதவீதம் பேருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் இருந்துள்ளன. அதாவது சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் ஆகிய இரண்டும் இணைந்தே இருந்துள்ளது.
இறந்தவர்களில் 59.6 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகள். 42.5 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், 18.8 சதவீதம் பேர் இருதய நோயாளிகள், 12 சதவீதம் பேர் நாட்பட்ட சிறுநீரக, நுரையீரல் நோய்கள், ஆஸ்துமா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
இது குறித்து ஆஸ்பத்திரிஅதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்த ஆய்வின் மூலம் முதியவர்கள், ஏற்கனவே நோய் இருப்பவர்களை வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும் என்தை புரிந்து கொள்ளலாம். அவர்கள் மட்டும் வீட்டில் இருந்தால் போதாது. அவர்கள் வசிக்கும் வீடுகளில் உள்ள மற்றவர்களும் அத்தியாவசிய தேவைத் தவிர வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகழுவ வேண்டும். வீட்டிற்கு திரும்பியதும் சோப்பால் 20 வினாடிகள் கைகளை தேய்த்துக் கழுவ வேண்டும்.
வீட்டில் இருக்கும் பழையநோயாளிகள் மற்றும் முதியவர்களுடன் நெருக்கம் காட்டுவதை தவிர்க்க வேண்டும். அப்போது தான் கொரோனா தொற்றில் இருந்து அவர்களை காக்க முடியும்,.
இவ்வாறு அந்த டாக்டர் கூறினார்.