தமிழகத்தில் ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா; 88 பேர் சாவு
1 min read
In Tamil nadu 4.807 person affected for Corona and death 88 today only
18-7-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இன்று மட்டும் கொரோனாவுக்கு 88 பேர் இறந்துள்ளனர்.
4,807 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவி வருகிறது. இந்த நிலவரத்தை தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெயிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) மட்டும் 4,807 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உ்ளளது. . அதில், 4,731 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 76 பேர் வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 56 அரசு ஆய்வகங்கள் உள்பட மொத்தம் 111 ஆய்வகங்களில் இன்று மட்டும் 48,195 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளையும் சேர்த்து, இதுவரை 18 லட்சத்து 79 ஆயிரத்து 499 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
குணம் அடைந்தவர்கள்
இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,907 பேர் ஆண்கள், 1,900 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 970 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 64,721 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது.
இன்று மட்டும் 3,049 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 856 ஆக உள்ளது.
88 பேர் சாவு
கொரோனாவுக்கு இன்று மட்டும் 88 பேர் இறந்தனர். இவர்களில், 24 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், 64 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,403 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 49,452 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை சுகாதாதரத்துறை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி
சென்னையில் இன்று அதிகபட்சமாக 1,219 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 370 பேருக்கும், செங்கல்பட்டில் 323 பேருக்கும், வேலூரில் 191 பேருக்கும், மதுரையில் 185 பேருக்கும், தஞ்சாவூரில் 181 பேருக்கும், விருதுநகரில் 179 பேருக்கும், சிவகங்கையில் 176 பேருக்கும், தூத்துக்குடி, திருநெல்வேலியில் தலா 161 பேருக்கும் தென்காசியில் 92 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
சென்னையில் சென்னையில் 31 பேரும், மதுரையில் 9 பேரும், திருவள்ளூரில் 7 பேரும், காஞ்சிபுரத்தில் 5 பேரும், ராமநாதபுரம், தேனி, வேலூரில் தலா 4 பேரும், சேலத்தில் 3 பேரும், செங்கல்பட்டு, திண்டுக்கல், திருவண்ணாமலை, விருதுநகரில் தலா 2 பேரும், கோவை, கன்னியாகுமரி, கரூர், நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் என மொத்தம் 88 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்