புதிய கல்விக் கொள்கையில் பாகுபாடு காட்டவில்லை; மோடி பேச்சு
1 min read
The new education policy did not discriminate; Modi says;
7-8-2020
புதிய கல்விக்கொள்கையில், எந்தவித பாகுபாடும் காட்டவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.
புதிய கல்வி கொள்கை
புதிய கல்விக் கொள்கைக்கு சமீபத்தில் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பலர் வரவேற்ற நிலையில் இதில் உள்ள மும்மொழி பாடத்திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் உள்பட சில கட்சியகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில் உயர்கல்வி சீர்திருத்த மாநாட்டி் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
அனைத்து தரப்பு கருத்துக்கள்
பல ஆண்டுகளாக இந்திய கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. பல ஆய்வுக்கு பிறகே புதிய கல்வி கொள்கை உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
அனைத்து தரப்புகளின் கருத்துகளை கேட்ட பிறகுதான், கல்விக்கொள்கை இறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது புதிய சவாலாக இருக்கும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்தக் கல்வி கொள்கையில் எந்தவித பாகுபாடும் இல்லை.
கல்விக்கொள்கையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் வருத்தமடைந்துள்ளனர். முன்னேறி செல்ல சீர்திருத்தமே ஒரே வழி என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தேசிய கல்வி கொள்கையில், எந்தவிதமான சார்புகளும் இல்லை. பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களை சேர்ந்தவர்கள் கல்வி கொள்கை குறித்து கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க வளர்ச்சியை அதிகரிக்க புதிய கல்விக்கொள்கை உதவும். ஆரோக்கியமான விவாதங்கள் கல்வித்துறையை வளர்ச்சி அடைய செய்யும்.
முழுமையான கல்வி என்பதே தற்போதைய தேவை. எதிர்காலத்திற்கு இளைஞர்கள் தயாராக உள்ளனர் என்பதை இந்த சீர்திருத்தம் உறுதி செய்கிறது.
இந்த புதிய கல்வியானது வருங்கால சந்ததிகளை வரும் காலங்களில் வரும் சவால்களை சந்திக்க தயார்படுத்தும்.
கற்பனை திறன்
மாணவர்களின் கற்பனை திறனை ஊக்குவிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
21ம் நூற்றாண்டிற்கான அடிதளத்தை புதிய கல்வி கொள்கை அமைக்கும் . முறையான கல்வி தற்போது தேவை என்பதற்காக புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வியை புதிய முறையில் வடிவமைப்பதன் மூலம் நமது மாணவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும்.
இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு கல்வி கொள்கை உதவும்
தாய் மொழிக் கல்வி
தாய்மொழியிலேயே கல்வி கற்பது மூலம் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால் தான் 5ம் வகுப்பு வரையில் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
வெறுமனே பாடங்களை படிப்பதைவிட கேள்வி கேட்கவும், ஆய்ந்தறியும் வகையில், புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குடிமகன்களாக இருக்க வேண்டும். ஆனால், நமது வேர்களை மறக்கக்கூடாது.
கல்விக்கொள்கை மாற்றத்தை நாம் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும். அதற்கு நாம் தயாராக வேண்டும்.
மாணவர்களுக்கு சுதந்திரம்
பாடதிட்டங்களை மாற்றுவதற்கு மாணவர்களுக்கு தற்போது சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
நல்ல குடிமகன்களை உருவாக்கும் முயற்சி வெற்றிபெற வேண்டுமானால் மாணவர்கள் சமூக சூழ்நிலையோடு மாணவர்கள் கல்வி கற்க வேண்டும்.
திறமை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை நமது வளங்கள். தொழில்நுட்பம் மூலம் நமது சமூகத்தின் கடைகோடியில் இருக்கும் மாணவர் வரை கல்வியை கொண்டு செல்ல முடியும்.
கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு இடையேயான இடைவெளியை குறைக்க முயற்சி செய்யப்படும்
ஆய்வு செய்வதிலும், அதனை குறைப்பதிலும் உள்ள இடைவெளியை புதிய கல்வி கொள்கை குறைக்கிறது.
அப்துல் கலாம்
கல்வியின் நோக்கமே சிறந்த மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சுட்டிகாட்டியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.