June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

டிக்-டாக் உடன் ஒப்பந்தம் செய்வது விஷப்பரீட்சை; பில்கேட்ஸ் கூறுகிறார்

1 min read
Contracting with Tic-Tac-Toe is poisoning; Says Bill Gates

9-8-2020
டிக்டாக் உடன் ஒப்பந்தம் செய்வது எனப்து விஷப் பரீட்சை என்றும் இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கூறியுள்ளார்.

டிக்-டாக்

டிக்-டாக் செயலி மக்களிடையே மிகவும் பிலமாகி இருந்தது. சீனாவை தலைமையிடமாக கொண்ட பைட் டேன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது இந்த டிக்-டாக்.
இந்திய எல்லைக்குள் புகுந்து பிரச்சினையை ஏற்படு்த்தியதால் சீனா இந்தியாவின் வெறுப்புக்கு ஆளாகியது. இதனால் டிக்-டாக் உள்பட சீனாவின் பலசெயலிகளை இந்தியா தடை செய்தது.
இதனை அடுத்து அமெரிக்காவும் டிக்-டாக்கிற்கு தடை செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது.
இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு டிக்டாக்கை விற்பது குறித்து அதன் தாய் நிறுவனம் பைட் டேன்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் உலக கோடிஸ்வரருமான பில் கேட்ஸ் கூறியதாவது:-
மைக்ரோ சாப்ட் – பைட் டேன்ஸ் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் என்பது ஒரு விஷ பரீட்சை. இந்த ஒப்பந்தத்தால் என்ன நடக்கும் என்பது யாருக்கு தெரியும். என்கிரிப்சன் பிரச்சினை நீடிக்கும் நிலையில் சமூக தளத்தை பராமரிப்பது கஷ்டமான காரியம்.
இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.