தமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா ; 6,020 பேர் டிஸ்சார்ஜ்
1 min read
In Tamil Nadu 5.994 person affected for corona and discharch 6,020
9-8-2020
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. 6,020 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
5,994 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி மாநில சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 5,994 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. அதில், 5,974 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 20 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில்…
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 989 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர, இன்று, செங்கல்பட்டில் 397 பேருக்கும், திருவள்ளூரில் 396 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 393 பேருக்கும், தேனியில் 360 பேருக்கும், தூத்துக்குடியில் 251 பேருக்கும், திருவண்ணாமலையில் 222 பேருக்கும், ராணிப்பேட்டையில் 219 பேருக்கும், கோவையில் 217 பேருக்கும், விருதுநகரில் 193 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
தென்காசியில் 173 பேருக்கும் 162 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 129 ஆய்வகங்களில் இன்று மட்டும் 70,186 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து, இதுவரை மொத்தம் 32 லட்சத்து 25 ஆயிரத்து 805 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
டிஸ்சார்ஜ்
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,503 பேர் ஆண்கள், 2,489 பேர் பெண்கள், 2 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,79,247 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,17,625 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
இன்று மட்டும் 6,020 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 638 ஆக உள்ளது.
119 பேர் சாவு
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 119 பேர் இறந்தனர். இதில் 85 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 34 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
கொரோனாவுக்கு இறந்தவர்களில் கோவை, விருதுநகரில் தலா 13 பேரும், சென்னையில் 12 பேரும், மதுரை, திருவள்ளூர், தூத்துக்குடியில் தலா 6 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூரில் தலா 5 பேரும், திண்டுக்கல், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, சிவகங்கை, திருநெல்வேலியில் தலா 4 பேரும், தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூரில் தலா 3 பேரும், கடலூர், நாமக்கல், ராமநாதபுரம், திருப்பூர், திருச்சியில் தலா 2 பேரும், அரியலூர், தருமபுரி, ஈரோடு, தென்காசியில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாக்கு இறந்தவர்களின் மொத்த மொத்த எண்ணிக்கை 4,927 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 53,336 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 14 ஆயிரத்து 605 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 44 ஆயிரத்து 934 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 37 ஆயிரத்து 362 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.