தமிழ்நாட்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு 17-ந் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை- செங்கோட்டையன் தகவல்
1 min read
Admission of students for 1st, 6th and 9th classes in Tamil Nadu from 17th - Senkottaiyan
11-8-2020
தமிழகத்தில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு வருகிற 17-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
17-ந் தேதி முதல்…
கொரோனா சூழலில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியமே இல்லை. கொரோனா தாக்கம் குறைந்தபின்னரே பள்ளிகள் திறப்பு பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்.
அதே நேரம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு வருகிற (ஆகஸ்டு) 17 -ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வருகிற 24-ந்தேதி முதல் தொடங்கப்படும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை.
ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறும் 2 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 17 -ந் தேதி முதல் சேர்க்கை நடைபெறும்.
இலவச பாடப்புத்தகங்கள்
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளன்றே இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும்.
இலவச கல்வி உரிமை சட்டத்தில் எல்கேஜி, 1ம் வகுப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் பெற்றோர் விண்ணப்பிக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்