குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
1 min read
குற்றாலம் மெயினருவி
11.8.2020
Flooding in Courtallam Fallsகுற்றாலத்தில் இந்த ஆண்டு ஜூன், ஜூலை ஆகிய 2 மாதங்களும் சீசன் சுமாராக காணப்பட்டது. ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே சாரல் பெய்தது. வெயிலும் காணப்பட்டது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் துவக்கத்திலிருந்து சாரல் நன்றாக பெய்து வருகிறது. அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மெயினருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், பின்னர் கட்டுக்குள் வருவதுமாக உள்ளது.
இன்று காலை மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்த போதும், நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இன்று காலையில் லேசான வெயிலும், மேகமூட்டமும் மாறிமாறி காணப்பட்டது.