மணிப்பூர் மாநிலத்தில் காங். எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் திடீர் ராஜினாமா
1 min read
In Manipur 6 Cong. MLAs resign abruptly
11-8-2020
மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை ச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.
பாரதீய ஜனதா ஆட்சி
மணிப்பூர் மாநில சட்டசபைக்கு கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தன. ஆனால் அக்கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இந்த நிலையில்
மொத்தமுள்ள 60 இடங்களில் பா.ஜ.க.வுக்கு 21 இடங்கள் கிடைத்தன. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளின் எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவோடு பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. முதல்வராக பிரேன் சிங் உள்ளார்.
இந்த நிலையில் பாரதீய ஜனதா அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கன்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களும், பாரதீய ஜனதாவை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.,க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதனால் பாரதீய ஜனதா அரசு கவிழும் சூழல்நிலை உருவானது.
இதனால் மணிப்பூர் சட்டசபையில் ஆளும் அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதில் நடந்த குரல் ஓட்டெடுப்பில் பாரதீய ஜனதா அரசு வெற்றி பெற்றது.
6 பேர் ராஜினாமா
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இன்று திடீரென ராஜினாமா செய்தனர். அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் யூமான் கெம்சந்திடம் கொடுத்தனர்.