சென்னையில் செவ்வாய் முதல் மதுக் கடைகள் திறப்பு
1 min read
Tasmac stores open in Chennai from Tuesday
16-8-2020
சென்னையில் நாளைமறுதினம்(செவ்வாய்க்கிழமை) முதல் மதுக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.
மதுக்கடைகள்
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால் ஊரங்கில் சில தளர்வுகளில் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் கடந்த மே மாதம் முதல் சென்னையை த் தவிர மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
அதாவது சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
செவ்வாய் முதல்
இந்த நிலையில் நாளை மறுநாள் ( செவ்வாய்க்கிழமை) முதல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மது கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். ஒரு கடையில் ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.