காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டதில் 3 வீரர்கள் மரணம்
1 min read
3 soldiers killed in terrorist firing in Kashmir
17-8-2020
காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டதில் 3 வீரர்கள் மரணம் அடைந்தனர்.
தேடுதல் வேட்டை
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்க்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவர் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் அந்த மாநிலத்தில் ஏற்கனே உள்ள பயங்கர வாதிகளை தேடி கண்டு பிடிக்கும் பணியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், போலீசாரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதேசமயம் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர்.
3 வீரர்கள் பலி
இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டம் கிரீரி பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இந்த மோதலில், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் மற்றும் ஒரு போலீஸ்காரர் என 3 வீரர்கள் மரணம் அடைந்தனர்.
இந்த மோதலைத் தொடர்ந்து கிரீரி பகுதியை ராணுவம் சுற்றி வளைத்து, தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடி வருகிறது.