டெல்லி பாராளுமன்ற வளாக கட்டிடத்தில் தீ விபத்து
1 min read
A fire broke out in the building of the Delhi Parliament complex
17-8-2020
டெல்லி பாராளுமன்ற வளாக கட்டிடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து
டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டிடத்தின் 6-வது மாடியில் இன்று(திங்கட்கிழமை) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் 7க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்தனர். அவர்கள் கடுமையாக போராடி, சில மணி நேரத்தில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீவிபத்து குறித்து தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது:-
மின்கசிவு
இன்று காலை 7. 30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புகை வருவதைக் கண்டவுடன் எங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக 5 தீயணைக்கும் வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டோம். இதற்கிடையே மேலும் 2 தீயணைக்கும் வாகனங்களும் வரவழைக்கப்பட்டு தீணை அணைக்கு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இனதால் தீ பரவல் கட்டுக்குள் வந்தது.
இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.