இளம் நடிகர்களை பகைத்துக் கொண்ட நடிகை -கெஞ்சும் நிலைக்கு வந்த பரிதாபம்
1 min read
17.8.2020
Actress who hated young actorsதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். சமீபகாலமாக அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லை. அப்படியே வந்தாலும் வயதான நடிகர்களுடன் ஜோடி போடுமாறு வாய்ப்பு கிடைக்கிறது
தமிழில் முருகதாஸ் இயக்கும் தளபதி 65 படத்தில் எப்படியாவது விஜய்யுடன் ஜோடி போட்டு விடலாம் என காஜல் அகர்வால் கண்ட கனவில் மண்ணை அள்ளிப் போட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
விவேகம் படத்தில் தல அஜித்துடன் ஜோடி போட்டதால் மீண்டும் அவருடன் வாய்ப்பு கிடைக்கும் என சிறுத்தை சிவாவை அவ்வப்போது தொடர்பு கொண்டுள்ளார் காஜல் அகர்வால். ஆனால் சிறுத்தை சிவாவும் மீண்டும் தல அஜித்தை இயக்குவதற்கு இன்னும் நீண்டகாலம் ஆகும் என தெரிகிறது.
முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில் இளம் நடிகர்களின் படங்களுக்கு பெரிய அளவு வாய்ப்பு வந்தும் அவர்களுடன் நடிக்க மாட்டேன் என திமிர் காட்டி வந்தாராம்.
அப்படியே நடித்தாலும் பெரிய சம்பளம் கொடுக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் சமீபகாலமாக அவரே வலிய வந்து சில இளம் நடிகர்களின் பட வாய்ப்பு கிடைக்குமா என கோலிவுட் வட்டாரங்களில் ஒரு விசிட் அடித்துள்ளார்.
ஏரி உடைந்தால் மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என்பதைப் போல பட வாய்ப்பு இல்லை என்றவுடன் சிறிய நடிகர்கள் பட வாய்ப்பு கிடைக்குமா எனக் கெஞ்சும் நிலைக்கு வந்துள்ளார்.