நடுத்தர மக்களுக்கான “ஆயுஷ்மான் பாரத்” மருத்துவ திட்டம்
1 min read
“Ayushman Bharat” medical program for middle class people
17-8-2020
ஏழைகள் அல்லாத நடுத்தர மக்களுக்காக மத்திய அரசு ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற மருத்துவத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
சுகாதார திட்டம்
ஏழை மக்களுக்கு எளிதாக அதேநேரம் தரமான மருத்துவ வசதி பெறும் வகையில் ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற மருத்துவத் திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் ஏழைகள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும். இதன் மூலம் 53 கோடி பேர் பயன்பெறுகின்றனர்.
தற்போது ஏழை அல்லாத நடுத்தர மக்களையும் உள்ளடக்கி இத்திட்டத்தைச் செயல்படுத்த தேசிய சுகாதார ஆணைய நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர், சிறு தொழில் புரிவோர், அமைப்புசாரா தொழிலாளர்கள் என 40 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இது பற்றி அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா பரவல் நேரத்தில் தான் நடுத்தர வர்க்கத்தினருக்கான மருத்துவ தேவையின் முக்கியத்துவம் வெகுவாக உணரப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தினர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சேவை பெற ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பிரீமியம் செலுத்த வேண்டியுள்ளது. பிரீமியம் தொகையை ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையாக குறைப்பதே இத்திட்டம். இது நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்தாக இருக்கும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்கள்.