மானூர் அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் சாவு; சேலை சக்கிரத்தில் சிக்கியதால் பரிதாபம்
1 min read
Female death in accident near Manur
17-8-2020
மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணின் சேலை சக்கரத்தில் சிக்கி கிழே விழுந்து இறந்தார்.
மகனுடன் சென்ற பெண்
நெல்லை மாவட்டம் மானூர் அருகே கானார்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலசிங் மனைவி அற்புதமணி(வயது 55). இவர் தனது மகன் நெல்சனுடன் மோட்டார் சைக்கிகளில் கானார்பட்டியில் இருந்து மானூருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அற்புதமணியின் சேலை முந்தானை சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலைகுலைந்த அற்புதமணி தலைக்குப்புற கீழே விழுந்தார்.
சாவு
இதில் சம்பவ இடத்திலேயே அற்புதமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.