எச். வசந்த குமாருக்கு வெனடிலேட்டர் சிகிச்சை
1 min read
Ventilator treatment for H. Vasantha Kumar
17-8-2020
காங்கிரஸ் எம்.பி. எச் . வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வென்டிலேட்டர் சிகிச்சை
தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அவருக்கு தற்போது வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எம்பி வசந்தகுமார் விரைவில் மீண்டு வர வேண்டும் என விரும்புகிறேன்.
தேர்தல் பரப்புரை
தமிழகத்தில் காங்கிரஸ் தேர்தல் பரப்புரை வருகிற 20-ந் தேதி முதல் தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்தல் பரப்புரை திருப்பூரில் தொடங்க உள்ளது. வாரம் 3 சட்டமன்ற தொகுதிகளில் தோழமை கட்சிகளுடன் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளோம்.
தமிழகத்தில் கொரோனாவை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.