மனித மேம்பாட்டு துறை, கல்வி அமைச்சகமாக பெயர் மாற்றம்
1 min read
Department of Human Development renamed as Ministry of Education
18-8-2020
புதிய கல்வி கொள்கையின் பரிந்துரையின் படி மனிதவள மேம்பாட்டு துறை என்ற பெயர் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
பெயர் மாற்றம்
புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து ‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவரான, கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு வரைவு தேசிய கல்வி கொள்கை குறித்த அறிக்கையை, மத்திய அரசிடம் கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி தாக்கல் செய்தது. இதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்.
புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையில் மனித மேம்டபாட்டு துறையின் பெயரை கல்வி அமைச்சகம் என மாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர் கல்வி அமைச்சகம் என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஒப்புதல்
இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
அதன்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் கல்வி அமைச்சகம் என்று மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மத்திய கல்வி அமைச்சகம் என அரசின் இணையதளத்திலும் பெயர் மாற்றப்பட்டது. இனி மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் எனவும் கல்வித்துறை இணை மந்திரி சஞ்சய் தோத்ரே எனவும் அழைக்கப்படுவார்கள்.