June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

மாமனார் தடுத்ததால் விஜய்யுடன் நடிக்க மறுத்த ஜோதிகா

1 min read

19.8.2020

Jyotika refuses to act with Vijay as her father-in-law stopped her

விஜய்யின் படங்களில் முன்னணி நடிகைகள் முதல் மூத்த நடிகைகள் வரை அவருடன் ஜோடி போட்டு நடிக்க ஆவலாக இருக்கும் நேரத்தில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் என்று சொல்லியுள்ளார் நடிகை ஜோதிகா.

நடிகை ஜோதிகா மற்றும் விஜய் தங்களது ஆரம்ப காலகட்டங்களில் குஷி, திருமலை போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளனர். இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு விஜய் மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கவில்லை. அதன் பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் ஜோதிகா நடிக்க மாட்டேன் என கூறி விட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மெர்சல். இதில் வெற்றிமாறன் என்ற கதாபாத்திரம் பெரிய வரவேற்ப்பை பெற்றது.

வெற்றிமாறன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்த சமந்தா, காஜல் அகர்வால் கதாபாத்திரங்களை விட நித்யா மேனன் கதாபாத்திரம் அதிகம் வரவேற்பு பெற்று பேசப்பட்டது.

முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் நடிகை ஜோதிகா. படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் தான் திடீரென அந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தாராம்.

விஜய்யுடன் ஜோதிகா நடிப்பதில் அவரது மாமனார் சிவகுமாருக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லையாம். குஷி படத்தில் நடித்த அந்த உதட்டு முத்தக்காட்சி தான் தற்போது வரை அவரது குடும்பத்தில் அலையாக வீசிக்கொண்டிருக்கிறது.

மீண்டும் அந்த உதட்டு முத்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்து விடும் என்ற காரணத்தினால் அவரை நடிக்க வேண்டாம் எனத் தடுத்து விட்டாராம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.