காதலித்த நடிகருக்கு திருமணமானதால் விரக்தியில் த்ரிஷா
1 min read
19.8.2020
Married to a beloved actor – Trisha frustratedநடிகை த்ரிஷா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் ராணா இருவரும் நீண்ட காலமாக நட்பு என்று கூறிக்கொண்டாலும் காதலித்து வந்த விஷயம் உலகறிந்தது. அவருக்காக தனது நிச்சயதார்த்தத்தை கூட நிறுத்தி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
வருண் மணியன் எனும் தொழிலதிபரை திருமணம் செய்ய இருந்த த்ரிஷா நிச்சயதார்த்தம் முடிந்த சில நாட்களிலேயே அவருடன் சேர விருப்பமில்லை என தெரிவித்து விட்டார்.
அதன் பிறகு அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இங்குதான் விதி விளையாடி உள்ளது. த்ரிஷா அந்த திருமணத்தை வேண்டாம் என்று சொன்னதே நடிகர் ராணாவின் மீது உள்ள காதலால் தானாம்.
இதெல்லாம் உண்மையா பொய்யா என்பது தெரியாமல் இருந்த நிலையில் சமீபத்தில் ராணாவுக்கு திருமணம் ஆனதிலிருந்து திரிஷா ஆளே மாறி விட்டதாக கூறுகின்றனர்.
ராணாவுக்கு திருமணம் ஆனதற்கு வாழ்த்துக்கள் சொல்லாமல் இருந்த திரிஷா உடனடியாக சமூக வலைதளத்தை விட்டு வெளியேறினார். பின்னர் ஒரு மாதம் கழித்து திரும்ப வந்தார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய நண்பர்களுடன் இருந்த புகைப்படங்களை எல்லாம் நீக்கி விட்டார். ராணா திருமணம் செய்து கொண்டதிலிருந்தே திரிஷா வேறு விதமாக நடந்து கொண்டிருக்கிறாராம். பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் சரி என்கிறது கோலிவுட் வட்டாரம்.