தெலுங்கானா மின்சார நிலையத்தில் தீ விபத்து- 9 பேர் பலி
1 min read
9 killed in Telangana power station fire
21-8-2020
தெலுங்கானா மின்சார நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியனாாகள்.
தீ விபத்து
தெலுங்கானா மாநிலத்தில் ஆந்திராவின் எல்லைப் பகுதியில் இருக்கும் ஸ்ரீசைலத்தில் மிகபெரிய அணைக்கட்டு ஒன்று உள்ளது. இதன் அருகே மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த மின்சார நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் மின் நிலையத்திற்குள் இருந்த 17 பேரில் 9 பேர் இறந்ததாகவும் 8 பேர் பத்திரமாக வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் சிஐடி குழுவிற்கு டிஜிபி கோவிந்த்சிங் தலைமை தாங்குவார் என கூறப்படுகிறது.
இரங்கல்
இந்த விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் டுவிட்டரில்இரங்கல் தெரிவித்து உள்ளனர்.