மராட்டிய மாநில அரசுக்கு சித்தி விநாயகர் கோவில் அறக்கட்டளை ரூ.10 கோடி நிதி; எதிர்த்து கோர்ட்டில் வழக்கு
1 min read
Siddhi Vinayagar Temple Foundation donates Rs 10 crore to Maratha state government; Case in Court Against
21-8-2020
மும்பை சித்திவிநாயகர் கோவில் அறக்கட்டளை சார்பில் மராட்டிய அரசுக்கு ரூ. 10 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடை விதிக்க மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
ரூ.10 கோடி நிதி
மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் அறக்கட்டளை அமைப்பு, மராட்டிய அரசுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 10 கோடி வழங்கியது. மராட்டிய மாநிலத்தின் பல்வேறு திட்டங்களுக்கு இரண்டு கட்டமாக இந்த நிதி கோவில் அறக்கட்டளை வழங்கியது.
கோவில் அறக்கட்டனை நிதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிதி வழங்கியதற்கு இடைகால தடை விதிக்க கோரியும், மும்பை ஐகோர்ட்டில்பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்தவழக்கினை விசாரித்த நீதிபதிகள் திப்னாகர் தத்தா, ரேவதி மொஹித் ஆகியோர் இடைக்கால தடை விதிக்க மறுத்தனர். உரிய பதில் மனு தாக்கல் செய்ய மராட்டிய அரசுக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.