கொரோனா வைரசை தடுக்கும் ஆயின்மெண்ட்
1 min read
Inhibiting the corona virus oilment
22-8-2020
கொரோனா வைரசை தடுக்கும்
ஆயின்மெண்ட் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா மருந்து
கொரோனாவுக்கு மருந்தோ, தடுப்பூசியோ
இன்னும் கண்டு பிடிக்கும் முன்பு அதை வரும் முன் தடுப்பதுதான் சமார்த்தியம் என்பதை பலரும் உணரத் தொடங்கிவிட்டனர். தமிழகத்தை பொறுத்தவரை வரை சித்த வைத்தியதில் பலரும் இறங்கி விட்டனர். எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மற்றும் இஞ்சி, எலுமிச்சம் பழம், மிளகு போன்றவற்றை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
ஆயின்மெண்ட்
அந்த வகையில் தற்போது அமெரிக்க
மருந்து நிறுவனம் ஒன்றின் ஆயின்மெண்டை
உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு
அமைப்பு அங்கீகரித்துள்ளது
“இந்த ஆயின்மெண்ட் கொரோனா உட்பட பல வைரஸ் காய்ச்சல்களை உடலுக்குள்
செல்லாமல் போக்கவல்லது'”என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘இந்த
ஆயின்மண்டின் லேப் பரிசோதனையின்
போது, டி3-எக்ஸ் சோதனை முடிவுற்று, 30
வினாடிகள் ஆனபிறகு, எந்த வைரசும்
இல்லாதது தெரியவந்தது’ என, இந்த
நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்தியானா மற்றும்
டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இந்த
மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி
டாக்டர் பிரயான் கூப்பர் கூறுகையில்,
”கொரோனா வைரஸ் மூக்கு துவாரங்கள்
வழியாகவே அதிக அளவில் உடலுக்குள்
செல்கின்றது. எங்கள் மருந்து நிறுவனத்தின்
ஆயின்மெண்டை தடவிக்கொண்டால்
கொரோனா வைரஸ் உடலுக்குள் செல்வதைத் தவிர்க்கலாம். தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு ஒருபக்கம் ஆராய்ச்சி நிலையில் இருந்தாலும் வருமுன் காப்பதே சிறந்தது. இந்த ஆயின்மெண்டை
தினசரி தடவிக்கொண்டு தாராளமாக
வெளியே செல்லலாம். இதன்மூலம் பயமின்றி
நாம் எதிர்வரும் மனிதர்களை எதிர்கொண்டு
பேசலாம். விரைவில் இந்த ஆயின்மென்ட்
விற்பனைக்குவரும்,” எனக் கூறியுள்ளார்.