டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி கைது
1 min read
ISIS in Delhi Terrorist arrested
22-8-2020
டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி அபு யூசுப் கைது செய்யப்பட்டார். டெல்லி போலீசின் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
பயங்கரவாதி
டெல்லியில் தவுலா கான் என்ற இடத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அபு யூசுப் என்பர் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு 11: 30 மணியளவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை பிடிக்க முயன்றனர்.
அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் தப்பி ஓடினார். ஆனால் போலீசார் கரோல்பாக்கில் இருந்து தவுலா கான் செல்லும் ரிட்ஜ் சாலையில் அந்த நபரை மடக்கினர்.
அவர், டெல்லியின் பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளதும், சதி திட்டங்கள் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கைது செய்யப்பட்ட நபர் லோதி காலனியில் உள்ள சிறப்பு படை அலுவலகத்திற்க கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. அவரிடம் இருந்து துப்பாக்கி, வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்கண்ட தகவலை டெல்லி துணை போலீஸ் கமிஷனர் பிரமோத் சிங் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடந்ததை தொடர்ந்து, அந்த பகுதியில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பெங்களூருவில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய டாக்டர் ஒருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.