ஒரே நேரத்தில் இரண்டு ஹீரோக்களுடன் ஜோடி போட்ட பிரியா பவானி சங்கர்
1 min read
22.8.2020
Priya Bhavani Shankar paired up with two heroes at the same timeமற்ற நடிகைகள் பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கும் நேரத்தில் கைவசம் பல படங்களை வைத்து சத்தமில்லாமல் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியல் மூலம் பிரபலமாகி மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர்.
முதல் படமே ஏடாகூடமாக ஹிட்டடிக்க தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்தது. அதுமட்டுமில்லாமல் அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் ஐந்து மொழிகளில் உருவாகும் அகம் பிரம்மாஸ்மி படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது சினிமா படம் எடுப்பது குறைந்துவிட்டதால் அனைவரும் வெப்சீரிஸ் இல் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர்.
அதிலும் பிரியா பவானி சங்கருக்கு வாய்ப்புகள் குவிகிறது. சத்தமே இல்லாமல் நடிகர் பரத் மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு வெப் சீரிஸில் நாயகியாக நடித்துள்ளார்.
முதல் முறையாக இந்த வெப்சீரிஸ் மூலம் கிளாமரில் களமிறங்கியுள்ளார். இந்த வெப்சீரிஸ் வெளியானவுடன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் அசால்டாக பிரியா பவானி சங்கர் ஜோடி போட போகிறார் என இப்போதே பேச்சுக்கள் எழுகின்றன.