தமிழகத்தில் ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 5,975 people in Tamil Nadu one day
23-8-2020
தமிழகத்தில் ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
5,975 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 5 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 541 பேர் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 6 ஆயிரத்து 47 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 19 ஆயிரத்து 327 ஆக உயர்ந்துள்ளது.
97 பேர் சாவு
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 97 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 517 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில்…
சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் மேற்பட்டோருக்கு கொரேனா கண்டறியப்பட்டு உள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,298 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,25,389 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை சென்னையில் மட்டும் 2,581 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டம் வாரியாக…
தமிழகத்தில் இன்று டிஸ்சார்ஜ் யெ்யப்பட்டவர்கள் மற்றும் அடைப்புக்குறிக்குள் இன்று இறந்தவர்கள் போன்ற விவரம் மாவட்ட வாரியாக வருமாறு:-
- அரியலூர் – 71 (0)
2.செங்கல்பட்டு – 483 ( 4) - சென்னை – 1040 (19)
- கோவை – 444 (2)
- கடலூர் – 238 (2)
- தருமபுரி – 11 (0)
- திண்டுக்கல் – 69 (3)
- ஈரோடு – 73 (2)
- கள்ளக்குறிச்சி – 83 (1)
- காஞ்சிபுரம் – 238 (3)
- கன்னியாகுமரி – 177 (1)
- கரூர் – 25 (1)
- கிருஷ்ணகிரி – 12 (0)
- மதுரை- 48 (3)
- நாகப்பட்டினம்- 56 (1)
- நாமக்கல் – 59 (0)
- நீலகிரி – 38 (3)
- பெரம்பலூர் – 39 (1)
- புதுக்கோட்டை – 170 (0)
- ராமநாதபுரம் – 61 (0)
- ராணிப்பேட்டை – 181 (2)
- சேலம் – 231 (8)
- சிவகங்கை – 52 (3)
- தென்காசி – 261 (3)
- தஞ்சாவூர் – 182 (3)
- தேனி – 265 (7)
- திருப்பத்தூர் – 52 (1)
- திருவள்ளூர் – 378 (5)
- திருவண்ணமலை – 125 (0)
- திருவாரூர் – 55 (3)
- தூத்துக்குடி – 112 (0)
- திருநெல்வேலி – 139 (4)
- திருப்பூர் – 54 (0)
- திருச்சி – 105 (3)
- வேலூர் – 219 (6)
- விழுப்புரம் – 95 (0)
- விருதுநகர் – 106 (3)