பாண்டிச்சேரியில் இ-பாஸ் முறை ரத்து
1 min read
E-pass system canceled in Pondicherry
23-8-2020
பாண்டிச்சேரியில் இன்று முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இ-பாஸ்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தற்போது இந்த இ-பாஸ் முறையை பல மாநிலங்களில் விலக்கி கொள்ளப்பட்டன. ஆனால் தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் இ-பாஸ் முறை அமலில் உள்ளது. இதனால் சாதாராண மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். மாவட்ட எல்லையில் வசிப்பவர்களால் பக்கத்து மாவட்டங்களுக்கு வேலைக்குக்கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு இ-பாஸ்முறையை ரத்து செய்யுமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம் எழுதியது.
அதாவது தனிநபர் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக மாநிலத்திற்குள்ளும் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயும் எந்த தடையும் ஏற்படக் கூடாது என்றும்,
இதை மீறி இ-பாஸ் போன்ற கட்டுப்பாடுகள் விதித்தால் அது உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்களை மீறும் செயல் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
பாண்டிச்சேரி
இதையடுத்து பாண்டிச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும் பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இ-பாஸ் தேவையில்லை என முதல்-அமைச்சர் வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இருப்பினும் புதுச்சேரிக்கு வருபவர்கள் தங்கள் பெயர்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். தங்கள் பெயர்களை பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
412 பேர்
மாநிலத்தில் ஒரே நாளில் மேலும் 412 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை அங்கு 10,522 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 3,072 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,657 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை மொத்தம் 159 பேர் பலியாகி உள்ளனர்.