தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 3. 44 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்
1 min read
44 lakh discharged from Corona in Tamil Nadu
27-8-2020
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3 லட்சத்து 43 ஆயிரத்து 930 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
5,981 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று( வியாழக்கிழமை) மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(வியாழக்கிழமை) மட்டும் 5,981 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதில், 5,951 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 30 ேவெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால்
பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,03,242 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 146 ஆய்வகங்களில் இன்று மட்டும் 76,345 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 44 லட்சத்து 98 ஆயிரத்து 706 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
டிஸ்சார்ஜ்
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 3,643 பேர் ஆண்கள், 2,338 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,43,589 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,59,624 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 5,870 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 930 ஆக உள்ளது.
109 பேர் சாவு
கொரோனாவுக்க இன்று மட்டும் 109 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 79 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 30 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 6,948 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 52,364 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 18 ஆயிரத்து 878 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 32 ஆயிரத்து 500 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 51 ஆயிரத்து 864 பேர்.
சென்னையில்…
சென்னையில் மட்டும் இன்று 1,286 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து சென்னையில் மட்டும் இதுவரை 1,30,567 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர இன்று, கோவையில் 439 பேருக்கும், சேலத்தில் 413 பேருக்கும், திருவள்ளூரில் 323 பேருக்கும், செங்கல்பட்டில் 298 பேருக்கும், கடலூரில் 261 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 256 பேருக்கும், ராணிப்பேட்டையில் 162 பேருக்கும், வேலூரில் 161 பேருக்கும், விருதுநகரில் 152 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
தென்காசி
திருநெல்வேலி மாவட்டத்தில் 118 பேருக்கும், தென்காசியில் 55 பேருக்கும், தூத்துக்குடியில் 95 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இன்று சென்னையில் கொரேனாாவுக்கு 32 பேர் இறந்துள்ளனர். திருவள்ளூரில் 13 பேரும், கோவையில் 11 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், சேலத்தில் 5 பேரும், மதுரை, நாகப்பட்டினத்தில் தலா 4 பேரும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் தலா 3 பேரும், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருவாரூர், திருநெல்வேலி, திருப்பூர், திருச்சியில் தலா 2 பேரும், அரியலூர், திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விருதுநகரில் தலா ஒருவரும் என 109 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,356 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,14,448 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூரில் 482 பேரும், கடலூரில் 406 பேரும், கோவையில் 357 பேரும், செங்கல்பட்டில் 263 பேரும், சேலத்தில் 217 பேரும், தேனியில் 202 பேரும், காஞ்சிபுரத்தில் 193 பேரும், வேலூரில் 187 பேரும், நாகப்பட்டினத்தில் 183 பேரும், விழுப்புரத்தில் 175 பேரும் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.