சென்னையில் மின்சார ரெயில் இயக்குவது எப்போது?
1 min read
When will the electric train run in Chennai?
5-9-2020
சென்னையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் மின்சார ரெயில் போக்குவரத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோருகிறார்கள்.
ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ், ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தற்போது பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 7-ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ்போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 7-ந் தேதி முதல் குறிப்பிட்ட வழித்தடங்களில் ரெயில் போக்குவரத்து நடக்கிறது. ஆனால் படிப்படியாக தேவைக்கு ஏற்ப ரெயில் போக்குவரத்து அதிகரிக்கப்படும் என்று இந்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.
மின்சார ரெயில்
சென்னையை பொறுத்தவரை மெடரோ ரெயில் வருகிற 7-ந் தேதி முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் சென்னையில் மின்சார ரெயில் எப்போது இயக்கப்படும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. சென்னையை பொறுத்தவரை சாதாரண மக்கள் அதிகம் மின்சார ரெயிலைத்தான் பயன்படுத்துவார்கள். அந்த ரெயில்கள் இயக்கப்படாததால் சாதாரண மக்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை.
வதந்தி
இந்த நிலையில் வருகிற 7-ந் தேதி முதல் சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்ற வலைதளத்தில் தகவல்கள் பரவியது. இனதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் இது வதந்தி என்று பின்னர் தெரியவந்தது. இதுபற்றி தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி பி.குகநேசன் விளக்கம் அளித்துள்ளார்.
” புறநகர் ரெயில சேவை தொடங்குவது குறித்து செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தகவல் முற்றிலும தவறானது. தெற்கு ரெயில்வே இதுபோன்ற எந்த செய்தியையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை . என்று அவர் குறிபிட்டு உள்ளார்.
ஆனாலும் விரைவில் மின்சார ரெயில்களை இயக்கி ஏழை மக்களின் இன்னலை போக்க வேண்டும் என்று சென்னை நகர மக்கள் விரும்புகிறார்கள்.
-தி.பாலசுப்பிரமணி, மூத்த பத்திரிகையாளர்.