“புதிய கல்விக் கொள்கையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சலுகைகள் – மோடி பேச்சு
1 min read
“Concessions have been given to students who have not mastered the new education policy,” Modi said
7-9-2020
“புதிய கல்விக் கொள்கையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
புதிய கல்விக் கொள்கை
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. இதனை ஒரு தரப்பினர் வரவேற்றுள்ளனர். ஆனால் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிலர் இந்த புதிய கல்விக் கொள்கையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாடு முழுவதும் காணொலி காட்சி மூலம் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு புதிய கல்விக் கொள்கையின் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் புதிய கல்வி கொள்கை குறித்த கவர்னர்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். மோடி பேசியதாவது:-
100 ஆண்டு கால பிரச்சினை
கல்வி கொள்கையை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தேசிய கல்வி கொள்கை வடிவத்தை முடிவு செய்து நாம் முன்னேறி செல்ல வேண்டும்.
கல்வி கொள்கை தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்த 100 ஆண்டுகளில் இருந்த பிரச்சினைகளுக்கான தீர்வு இந்த கல்வி கொள்கையில் உள்ளது. மாணவர்கள் விருப்பப்படி பயிலும் வகையில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி பெறாத மாணவர்கள்
எது நமது மூளையை சுதந்திரமாக செயல்பட வைக்கிறதோ அதுவே அறிவு. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் பல்வேறு வாய்ப்புகள், கல்வி கொள்கையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாணவர்களின் தேர்வு சுமையில் இருந்து தீர்வு காணப்பட்டுள்ளது.
கல்வி கொள்கை தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பெரும்பாலான மாநிலங்கள் கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. தேசிய கல்வி கொள்கை, நாடு முழுவதும் மிக விரைவில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.