நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா நிலவரம்
1 min read
Corona situation in Nellai, Tenkasi and Thoothukudi
7-9-2020
நெல்லை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனையும் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10396 ஆக உயர்ந்துள்ளது.
இந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 126 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும சேர்த்து இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9083 ஆனது. இந்த மாவட்டத்தில் தற்போது1126 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை
பெற்று வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் இன்று கொரோனாவுக்கு யாரும் இறக்கவில்லை. இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவுக்கு187 பேர் இறந்துள்ளனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இன்று ( திங்கட்கிழமை) ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5877 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்மு் 122 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5143 ஆனது.
தற்போது இந்த மாவட்டத்தில் 625 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தென்காசியில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் இறந்தர். இதுவரை வரை 109 பேர் பலியாகி உள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11829 ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 39 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 11000 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது இந்த மாவட்டத்தில் 714 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று கொரோனாவுக்கு யாரும் இறக்கவில்லை. இந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு115 பேர் இறந்துள்ளனர்.