அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு 22-ந் தேதி தொடக்கம்
1 min read
Anna University Final Semester Examination starts on 22nd
8-9-2020
சென்னை அண்ணா பல்லைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகள் வருகிற 22-ந் தேதி முதல் ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு வருகிற 22-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ஆன்லைனில் நடத்தப்படும்.
தேர்வு நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், ஆன்லைனில் மாதிரி தேர்வு நடக்கும். கணினி, லேப்டாப் ஆகியவற்றில்,கேமரா, மைக்ரோபோன் வசதியுடன் இணையதள வசதி இருக்க வேண்டும். Multiple choice questions அடிப்படையில் தேர்வு நடத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.