இந்தியாவில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணம் என்ன?
1 min read
What is the reason for the increase in corona in India?
10-9-2020
இந்தியாவில் கொரேனா பரிசோதனைகள் அதிகம் நடப்பதால் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக தென்படுகிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
கொரோனா
இந்தியாவில் கொரோன பரவல் பற்றிய விவரங்களை மத்திய சுகாதாரத்துறை தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் நேற்று( வியாழக்கிழமை) ஒரே நாளில் 95,735 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை 44 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 75,062 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து 34 லட்சத்து 71 ஆயிரம் பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
காரணம் என்ன?
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5.29 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 5,29,34,433 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 11, 29,756 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்ட்டன.