ஏரல் அருகே பலாத்காரம் செய்து பெண் கொலை? : 3 பேர் பிடிபட்டனர்
1 min read
Rape and murder of a woman near the auction? : 3 people were caught
12-9-2020
ஏரல் அருகே பலாத்காரம் செய்யப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் பிடிபட்டனர்.
பெண் பிணம்
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சம்படி கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி செங்கமலம் (வயது 47). இந்த தம்பதியருக்கு 2 மகள் ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் கணேசன் மரணம் அடைந்து விட்டார். பின்னர் அவரது தம்பி ஆண்டியப்பன் (42) என்பவருடன் செங்கமலம் தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டிலிருந்து சுமார் அரை கிமீ தொலைவில், செங்கமலம் முகம் சிதைக்கப்பட்டு நிர்வாண நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு வெங்கடேஷசன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பாலியல் பலாத்காரம்
முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த கொடூர கொலை தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த 3பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.