தூத்துக்குடியில் வாலிபர் வெட்டிக் கொலை: 6 பேருக்கு வீச்சு
1 min read
youth killed by 6 person in Thoothukudi
14-9-2020
தூத்துக்குடியில் நேற்றிரவு வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நண்பர்கள்
தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் கபில்தேவ் (வயது 27). முத்தையாபுரம் சுந்தர் நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் சாம்சன் (23). இவர்கள் இருவரும் நண்பர்கள்.
நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு தூத்துக்குடி பஜாரில் உள்ள ஜவுளி கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு சாம்சனின் நண்பரான தாளமுத்து நகரைச் சேர்ந்த ராஜவேல் என்ற இஸ்ரவேல் (19) அங்கு வந்தார். அவருக்கும் கபில்தேவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடையில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
வெட்டிக் கொலை
அதன்பின் சாம்சனுக்கு போன் செய்து, கபில்தேவை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு வரவழைத்துள்ளனர். அப்போது கபில்தேவை, ராஜவேல் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. இதில் சாம்சன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவலறிந்து தூத்துக்குடி டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கபில்தேவ் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜவேல் உட்பட 6 பேரை வலைதேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது