June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு- சட்டசபையில் மசோதா தாக்கல்

1 min read

Allocation of 7.5 per cent in medical seats for government school students- Bill tabled in the Assembly

15-9-2020

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு செய்யும் மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

நீட்

மருத்துவ படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும், ‘நீட்’ தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழக அரசு சார்பில், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ மாணவர் சேர்க்கையில், உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி அமைக்கப்பட்டது.

சட்ட சபையில்….

அந்தக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து தற்போது சட்டசபையில் இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.