வெள்ளிக்கிரகத்தில் உயிரினம் வாழ வாய்ப்பு- விஞ்ஞானிகள் தகவல்
1 min read
The possibility of life on the planet Mercury- Scientists information
15-9-2020
வெள்ளிக்கிரகத்தில் உயிரினங்கள் வாழுவதற்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
வெள்ளி கிரகம்
நாம் வாழும் பூமியைத் தவிர வேறு எந்த கிரகத்திலாவது உயிரினங்கள் வாழ்கின்றனவா என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில்
சூரியனுக்கு அருகில் உள்ள வெள்ளி கிரகத்தின் வெப்பநிலை 900 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கிரகத்தைப் பற்றிய ஆய்வில் Jane Greaves என்ற இங்கிலாந்து விஞ்ஞானி தலைமையிலான குழுவினர் ஈடுபட்டபோது வெள்ளி கிரகத்தின் அமில மேகங்களில் இருந்து பாஸ்பீன் வாயுவின் தடயத்தை கண்டுபிடித்தனர்.
நிறமற்றதும், எளிதில் தீப்பிடிக்கக் கூடியதும், துர்நாற்றம் அடிக்கக் கூடிய இந்த வாயு, ஒரு மடங்கு பாஸ்பரஸ் மற்றும் 3 மடங்கு ஹைட்ரஜன் என்ற அளவில் உருவாகும் வாயுவாகும்.
உயிரினம் வாழ வாய்ப்பு
எனவே வெள்ளி கிரகத்தில் இந்த வாயு இருப்பதன் மூலம் ஹைட்ரஜன் இருப்பதும் உறுதியாகி உள்ளது. மனிதர்கள் உயிர் வாழ ஹைட்ரஜன் வாயுவும் தேவை என்பதால் உறுதியாக வெள்ளி கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சூழ்நிலை பிரகாசமாகி உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.