சசிகலா விடுதலை எப்போது?; சிறைத்துறை அறிவிப்பு
1 min read
When will Sasikala be released ?; Prison Description
15-9-2020
ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவது எப்போது என்று சிறை துறை தகவல் வெளியிட்டு உள்ளது.
சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலிதாவின் தோழி சசிகலா மற்றும் இவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டத. இதை அடுதது அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் தண்டனை காலம் அடுத்த வருடம் (2021-ம் ஆண்டு) பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதாவது நன்னடத்தை மற்றும் பரோல் காலம் போன்றவை காரணமாக அவர் விரைவில் விடுதலையாக வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.
இந்தநிலையில், பெங்களுரு சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என தகவல் அறிவும் உரிமை சட்டத்தின் மூலம் சிறைத்துறையிடம் தகவல் கேட்கப்பட்டது.
ஜனவரி 27-ந் தேதி
இதற்கு பதிலளித்துள்ள சிறைத்துறை நிர்வாகம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி சசிகலா விடுதலை ஆகிறார் என தெரிவித்துள்ளது.
மேலும், சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை என்றும் ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும் என்றும் சிறை துறை விளக்கி உள்ளது. அபராத தொகையை கட்டத் தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.
இதன்மூலம் சசிகலா விடுதலை எப்போது என்பது உறுதியாகிவிட்டது.