வெளிநாட்டில் வசிக்கும் 11,616 இந்தியர்களுக்கு கொரோனா
1 min read
Corona for 11,616 Indians living abroad
18-9-2020
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களில் 11,616 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய மந்திரி முரளீதரன் கூறினார்.
மத்திய மந்திரி பதில்
தற்போது பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிறது. பாராளுமன்ற மேல் சபையில்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் பதில் அளித்து பேசியதாவது:-
11,616 இந்தியர்கள்
கடந்த 10-ந் தேதி நிலவரப்படி வெளிநாட்டில் வசிக்கும் 11,616 இந்தியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தூதரகங்கள் அறிக்கை தெரிவிக்கிறது.
வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் 14 லட்சத்து 12 ஆயிரத்து 835 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். மேலும் 4.80 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து இணைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
வெளிநாடுகளில் வேலை இழந்து நெருக்கடியில் சிக்கி தவித்த இந்தியர்களுக்காக இந்திய சமூகத்தினர் நல நிதியில் இருந்து 22.5 கோடி ரூபாய் உதவி தொகை துாதரகங்கள் வாயிலாக வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மத்திய மந்திரி முரளிதரன் கூறினார்.