பாரதீய ஜனதா மூத்த தலைவர் உமாபாரதிக்கு கொரோனா
1 min read
Corona to BJP senior leader Uma Bharti
29/9/2020
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உமாபாரதிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உ்ளளது.
இதனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
உமாபாரதி
பா.ஜனதா மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான உமாபாரதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இமயமலை சென்றிருந்தார். அங்கிருந்து வீடு திரும்பிய பின்னர் காய்ச்சல் அதிகமாக இருந்தது.
இதையடுத்து ரிஷிகேசில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சோதனை செய்த போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், தனது ஓட்டுநருக்கும் கொரோனா தொற்று இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனக்காக கவலைப்படுபவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.